Note: For english version of this article, please click here
கிராம புத்துணர்வு இயக்கம்
Action for Rural Rejuvenation
இந்திய கிராமங்களில் புத்துணர்வு ஊட்டும் மகத்தான திட்டம்
கிராம புத்துணர்வு இயக்கம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாய் விளங்கும் கிராமங்களில், புத்துணர்வினை ஏற்படுத்துவதாக, ஈஷா அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும் செயல் திட்டமாகும். ஒருமித்த சிந்தனையுள்ள பல தனி மனிதர்களும், இயக்கங்களும், கிராம மக்களுடன் ஒன்றிணைந்து மிகநுட்பமாய் உருவாக்கப்பட்ட திட்டங்களை சிறு கிராமங்களிலும் செயல்படுத்துவதன் மூலமாக நம்பிக்கையற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் கிக்குண்ட மக்களின் வாழ்வில் ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்தத்திட்டம் தன்னை உணர்ந்த ஞானியாகவும், யோகியாகவும், குருவாகவும் திகழும், சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் விருப்பத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் உருவாகியிருக்கிறது. மூன்றுப் பிறவிகளாய்த் தன்னுள் வேர் கொண்ட ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை வெளிப்படுத்தும் வாகனமாக ஈஷா யோகா – இறைநிலை யோகம் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு தற்போது தனத்தன்மை வாய்ந்த ஆன்மீக விஞஞானமாக உலகமெங்கும் இலட்சக்கணக்கான மனிதர்களுக்குப் பயன்படுகின்றது. சத்குரு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஈஷா அறக்கட்டளை எனும் சர்வதேசத் தொண்டு நிறுவனம் பொருள்நிலை இயல்புகளைக் கடந்த உள்நிலை உண்மைகளைக் கண்டுணரவும், வாழ்வின் நோக்கமான உச்சநிலை விழிப்புணர்வு எனும் ஞானத்தை அடையவும் வழிபாட்டியாக உள்ளது.
மேற்கிந்திய அளவுகோலு்ககு இணையாக பொருளாதார வளத்தை மேம்படுத்துவதைவிட, எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதே மிகுந்த பயனைத்தரும் என்பது சத்குரு அவர்களின் உணர்வாகும். அர்பணிப்புணர்வுள்ள பல்லாயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்களும், நன்கொடையாளர்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் உதவியுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுகிறார்கள்.
செயல்திட்ங்கள்
- கிராமப்புற நலவாழ்வு – இலவச நடமாடும் மருத்துவமனைகள்
- யோக சாலைகளும் உடற்பயிற்சிக் கூடமும்
- மூலிகைத் தோட்டம், கிராமங்களில் தோட்டப்பண்ணை
- விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள்
- சுகாதாரம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு
- பெண்களுக்கு தொழிற் பயிற்சி
- கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்
- கிராம நூலகம்
இலவச நடமாடும் மருத்துவமணைகள்
இன்றைய மருத்துவச்சூழலில், குறைந்த செலவில் மருத்துவம் என்பது கிராமப் புறங்களில் வெறும் கனவாகவே உள்ளது. எனவே கிராம மக்கள் மருத்துவ வசதி, பணவசதி இரண்டுமின்றித் தவிக்கின்றனர். உடல் நலம், சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வு குறைந்திருப்பதோடு வரும்முன் தடுத்திடும் முறைகளும் சொல்லித்தரப்படவில்லை.
இத்திட்டத்தின் அங்கமான இலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது. நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதும், புனிதம் மிக்கதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன.
தற்போது கோபி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 720 கிராமங்களில் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் தினமும் ஏறத்தாழ 2,400 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் இலவச யோகப்பயிற்சி மூலம் சுமார் 80,000 கிராமப்புற மக்கள் இதுவரை பயனடைந்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கான இலவச யோகப்பயிற்சிகளும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 120 கிராமங்களில் 3,600 குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
350-க்கும் மேலான கிராமங்களில் ஆண்களுக்கு வாலிபால், பொண்களுக்கு துரோபால் போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு முறை கிராம மக்களுக்கான கிராம ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றது.
ஒவ்வொரு கிராமத்திலும், பள்ளிகளிலும், வீடுகளிலும், ஆரோக்கிய வாழ்விற்கு துணை செய்யும் மூலிகைத் தோட்டங்கள் அமைத்துத் தரப்படுகின்றன. மேலும் விவசாயிகளுக்கான விவசாய கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விவசாய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தள்ளனர்.
நாட்டை பசுமையாக்கும் நோக்குடன் ஒவ்வோரு கிராமத்திலும் சுமார் 100 முதல் 300 வரை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புகள்
1 | பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்கள் ஆகிய தினங்களில் | |
| a. ஒரு நாள் நடமாடும் மருத்துவமனைக்கான மருந்து செலவு | : ரூ. 1,500/- |
| b. ஒரு மாதம் நடமாடும் மருத்துவமனைக்கான மருந்து செலவு | : ரூ. 40,000/- |
| c. ஒரு கிராமத்திற்கான ஒரு மாத மருந்து செலவு | : ரூ. 4,500/- |
2 | 100 / 1000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட | : ரூ. 3,600/- / 36,000/- |
3 | ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைத்திட | : ரூ. 5,000/- |
4 | கிராமப்புறக் குழந்தைகளுக்கான இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள் நடத்திட | : ரூ. 8,000/- |
5 | கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்திட | : ரூ. 3,000/- |
6 | சுமார் 240 கிராம மக்கள் பயனடைகிற யோக வகுப்புகள் நடத்திட | : ரூ. 6,000/- |
7 | கிராமங்கள் தோறும் புத்துணர்வுக் கருவறை அமைத்திட | : ரூ.2,00,000/- |
8 | கிராமங்கள் தோறும் மூலிகைத் தோட்டம் அமைத்திட | : ரூ. 11,000/- |
நமது புண்ணிய பூமியில் வாழும் மக்களின் நலவாழ்வில் நாட்டமுடைய பிற அமைப்பினரையும், மக்கள் குழுவினரையும், தனி மனிதர்களையும், இந்த மகத்தான முயற்சிக்கு உறுதுணையாய்த் திகழவும், பங்கேற்றிடவும் அன்புடன் அழைக்கின்றோம்.
கிராமப் புத்துணர்வு இயக்கம்
அலுவலகங்கள்:
· 15, கோவிந்தசாமி நாயுடு லே அவுட், சிங்காநல்லூர், கோவை – 15. போன்: +91-422-231 9654, 55
· 20, 9வது வீதி, டாடாபாத், கோவை – 641 012. போன்: +91-422-249 5453
· 9, P.M.K. ரைஸ்மில் வீதி, புதுப்பாளையம், கோபி – 638 476. போன்: +91-4285-221714
· 21, அத்வைதா ஆஷ்ரம் ரோடு, பாலாஜி நகர், சேலம் – 16. போன்: +91-427-233 3232
· 37, சுப்புராய செட்டி வீதி, கடலூர் – 2. பொன்: +91-94433 57563
வேண்டுகோள்
உலகின் செல்வ வளத்தையும், உலகிலிருந்து கிடைக்கக் கூடியவற்ளையும் பார்க்கும் பொழுது இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நமக்கத் தேவைப்படும் நிதி வெகு சொற்பமானதே. ஆனால் வாழ்க்கைக்கு எதிர்மறையான விஷயங்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைப்பார்த்தால், இது ஒரு விஷயமே அல்ல. இந்தியாவில் ஒரு நாளில் புகையிலைக்காகவும், மதுபானத்திற்காகவும், ஒரு சில ஏவுகணைகளுக்காகவும் செலவிடப்படும் நிதி நம்மிடம் கொடுக்கப்படுமேயானால், அதைக்கொண்டே அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயலாக்க நம்மால் முடியும்.
இதுவரை இது நிகழாமலிருப்பதன் காரணம், நம்மிடம் போதுமான வளங்கள் இல்லையென்பதால் அல்ல. ஒருபோதும் இதைப்பற்றி நாம் அக்கறையோடு இல்லை. யாரோ பாதிக்கப்படுகிறார்கள், இது நம்முடைய பாதிப்பு இல்லையென நாம் நினைக்கின்றோம். நமக்கு பாதிப்பு வரும் வரை, அதைப்பற்றி நாம் அந்த அக்கறையும் கொள்ளாமலிருக்கிறோம். நாம் ஏற்படுத்த விரும்புகின்ற கலாச்சார ஆன்மீகச்சூழல், தற்போது தன்பங்களைக் குறித்ததல்ல. அத்தனை துன்பங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே. குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்குள்ளாவது பாதிப்புகள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். நம்மால் அதனை நிகழ்த்திட முடியும். அதற்கான நுட்பங்களும், வழிமுறைகளும் நம்மிடம் உள்ளன. இதனை செயலாக்க வேண்டும். அவ்வளவுதான்.
இவையனைத்து்ம நிகழ பெருமளவு பொருளாதார உதவியும், விசாலமான இதயம் கொண்ட அர்பணிப்பு உணர்வுள்ள மனிதர்களின் வருனையும் செயலுமே தேவை. இது உய்கள் இதயத்திலிருந்து ம்டடுமே நிகழ முடியும். நீங்கள் செயல்திறன் மிக்கவர் என்றாலோ, விசாலமான இதயத்தோடோ, புத்திக்கூர்மை மிகுந்தவர் என்றாலோ அல்லது மிகுந்த நிதிவசதியுடனோ, எந்த வகையான மனிதர் என்றாலும் சரி, நீங்கள் தேவை. இவை அனைத்துமே, இது நிகழ்ந்திடத் தேவையாயிருக்கிறது. நீங்கள் மனிதநேயம் மிக்கவரெனில், இது உங்கள் திட்டம்.
- சத்குரு ஜகி வாசுதேவ்
மேலும் விபரங்களுக்கு, ஈசா யோக மையத்தின் கிராம புத்துணர்வு இயக்கத்தின் இணையதளத்தை பாருங்கள். இணையதள முகவரி: http://www.ruralrejuvenation.org/
No comments:
Post a Comment